உலக காதலர் தினத்திற்கு எதிர்ப்பு...... கைகளில் தாலி,மாலைகளுடன் தேனி வைகை அணை பூங்காவிற்கு வந்த இந்து முன்னணி அமைப்பினரால் பரபரப்பு
இன்று பிப்ரவரி 14 உலகம் முழுவதும் காவலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் காதலர் தினம் ஆங்கில வழியில் வந்தது இதனை கண்டிக்கிறோம் என இந்துத்துவ அமைப்புகள் தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கைகளில் தாலி மற்றும் பூமாலைகளுடன் தேனி மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ஆட்சி கார்த்திக் தலைமையிலும் ஆண்டிப்பட்டி நகர பொதுச்செயலாளர் ராஜ் பகவதி முன்னிலையிலும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பூங்காவிற்கு வந்திருந்தனர்.
கடையில் உள்ள வலது கரை இடது கரை பூங்காக்களில் காதல் ஜோடிகளாக யாரும் வந்திருந்தால் அவர்களைப் பிடித்து கையோடு திருமணம் செய்து கொள்ள வைப்பதற்காக திட்டமிட்டு தேடிய அவர்கள் திருமணம் முடித்து குடும்பத்தோடும் குழந்தைகளோடும் பூங்காவிற்குள் வந்திருந்தவர்களை வரவேற்று அவர்களுக்கு இனிப்புகளும் வழங்கினர்.
ரோமியோ ஜூலியட் போல் ஆங்கில வழியில் வந்த காதலையும் காதலர் தினத்தையும் கண்டிப்பதாக கூறி வைகை அணை பூங்காவில் நுழைப்பகுதியில் கண்டன கோசம் எழுப்பினர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காதல் ஜோடிகளைத் தேடி இந்து முன்னணி அமைப்பினர் பூங்காவிற்குள் சுற்றிய நிலையில் காதல் ஜோடிகள் யாருமே பூங்காவிற்குள் இன்று வரவில்லை.ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் வைகை அணை காவல் நிலைய காவல்துறையினர் காவல் நிலையம் முன்பாகவே பூங்காவிற்குள் சென்றவர்களை தடுத்து பார்த்து காதலர்களாக வந்தவர்களை விரட்டி அடித்தனர்.
No comments