தவெக-வின் வாக்கு சதவீதம் எவ்வளவு...? விஜயிடம் அறிக்கையை சமர்ப்பித்தார் பிரசாந்த் கிஷோர்
தமிழக வெற்றி கழகம் என்றுஅரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.ந டிகர் விஜய்யை நேற்று பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து பேசிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்தார். அப்போது வீட்டுக்கு ஒரு ஓட்டு என்ற அடிப்படையில் வியூகம் வகுத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த தேர்தல்களில் பாஜக மற்றும் திமுக போன்ற கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டுள்ளார்.
இவர்களுடைய சந்திப்பை தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் சிறார் அணி மற்றும் திருநங்கைகள் அணி உட்பட மொத்தம் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது குறித்து அறிக்கையை தற்போது பிரசாந்த் கிஷோர் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி 15 முதல் 20 சதவீத வாக்குகள் விஜய்க்கு இருக்கிறதாம். இதேபோன்று எந்த பகுதியில் தமிழக வெற்றி கழகத்திற்கு அதிக ஆதரவு இருக்கிறது போன்ற தகவல்களையும் தெரிவித்துள்ளார். எந்த பகுதியில் அதிக ஓட்டுகள் விஜய்க்கு இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
No comments