• Breaking News

    கும்மிடிப்பூண்டி: மேல்பாக்கம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த காவல்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் மறியல்


    கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாக்கம் கிராமத்தில் பழங்குடி, ஆதிதிராவிடர் உள்ளிட்ட பல சமுதாயங்களைச் சார்ந்த 66 குடும்பங்கள் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து சுமார் 60 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து தனிநபர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் ஆக்கிரமிப்பில் இருக்கும் வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    இதனை நிறைவேற்ற இன்று நிகழ்விடத்திற்கு வனத்துறையினர், வருவாய் துறையினர், மின்வாரியத் துறையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் என ஏராளமானோர் மேல்பாக்கம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்புக்காக 250 போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் இப்பகுதியில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    அதேபோல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மாற்றாக  மாற்றிடம் வழங்கவும்,  அரசுக்கு நிலத்துக்குரிய தொகை வழங்கவும், குத்தகைக்குப் பெரவும் ஆக்ரமிப்பார்கள் தயார் நிலையில் உள்ளபோதும் கோரிக்கைகளை ஏற்காமல் செயல்படும் அரசு அதிகாரிகளை தடுத்து நிறுத்த ஊராட்சியைச் சேர்ந்த சுமார் 300 மேற்பட்ட கிராமவாசிகள் ஒரே இடத்தில் கூடியுள்ளதால் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    நிகழ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் அதே போல் கைது நடவடிக்கைக்கு தேவையான வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

    No comments