• Breaking News

    சாம்பியன்ஸ் டிராபி தொடர்..... லாகூர் ஸ்டேடியத்தில் இந்திய கொடி புறக்கணிப்பு.....

     


    சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்தப் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்திய அணிக்கு உரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று கூறப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தது. அதனால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    தற்போதைய போட்டிக்கு பாகிஸ்தான் ஹோஸ்ட் ஆக உள்ளதால் லாகூர் ஸ்டேடியத்தில் அணைத்து அணிகளின் கொடிகளும் ஏற்றப்பட்டது. ஆனால் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில், மொத்தம் 7 நாடுகளின் கொடிகள் மட்டுமே பறந்தன. ஆனால் இந்திய கொடி மற்றும் ஏற்றப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு PCB விளக்கம் அளிக்குமா? அல்லது இது இரு நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்துமா? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    No comments