• Breaking News

    குரோம்பேட்டையில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்


    சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் நண்பர்கள் அறப்பணி இயக்கம் தலைவர் ஜி.அரவிந்தராஜ், டில்லி பாபு, சத்தியமூர்த்தி, தாமஸ், எட்வின்தாமஸ், தம்புராஜ், அறிவுமதி தலைமையில் போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஐந்தாயிரம் பேர் கலந்து கொண்ட மாரத்தான் நடைபெற்றது. இதனை அமைச்சர் தா.மோ அன்பரசன் கொடியாசைத்து துவக்கி வைத்தார்.

    இதில் சிறியவர் பெரியவர் மாற்றுத்திறனாளி என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு குரோம்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து துவங்கி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று மீண்டும் குரோம்பேட்டை பேருந்து நிலையத்தையே வந்தடைந்தனர்.

    இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய தா.மோ.அன்பரசன் தமிழக மக்களிடையே போதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டு இந்த மாரத்தான் நடைபெற்றுள்ளது.

    போதைப்பொருட்கள் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவி இளைஞர்கள் கெட்டுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் போதையில் இருந்து இளைஞர்களை பாதுகாத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

    இது கடந்த 10 வருடத்தில் ஆரம்பித்தது அப்பொழுது யார் ஆட்சியில் இருந்தால் என்பது அனைவருக்கும் தெரியும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஞ்சா பிடிக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் இது நடைபெற்றுள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.‌காமராஜ், 2வது மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை, 1வது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், பெர்னார்ட், மாமன்ற உறுப்பினர்கள் பகுதி கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    No comments