அண்ணா அறிவாலயம் ரெட் லைட் ஏரியாவா...? பொன்னார் பொளேர்
பாஜக கட்சியின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன். இவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை அண்ணா அறிவாலயத்திற்கு செல்வேன் என்று கூறியது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதாவது அண்ணா அறிவாலயத்திற்கு நான் தனியாக வருகிறேன் என்று அண்ணாமலை கோரிய நிலையில் தைரியம் இருந்தால் வர சொல்லுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். இது தொடர்பாக பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, அண்ணாமலைக்கு உதயநிதி சவால் விட்டுள்ளார்.
அண்ணாமலை இருக்கட்டும் நானே வருகிறேன். எங்கே வரணும் என்று சொல்லுங்கள். எப்போது வரணும் என்று டைம் குறித்து சொல்லுங்கள். தமிழக முதல்வரே இது தமிழ்நாடு 8 கோடி மக்களுக்கும் சொந்தமானது.அப்படி இருக்கும்போது அண்ணா அறிவாலயத்திற்கு முன்னாள் மட்டும் வரக்கூடாது என்று சொன்னால் அது என்ன ரெட் லைட் ஏரியாவா.? அங்க வரக்கூடாது என்று சொல்வதற்கு உங்களுக்கு எவ்வளவு தைரியம். கேவலமான ஒன்று இது. உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய வார்த்தைகளை திரும்ப பெற வேண்டும். ஒரு பக்கத்தில் குழந்தைகளை அப்பா என்று கூப்பிட சொல்வது சரிதான் சந்தோஷப்படுகிறோம்.
ஆனால் எங்க பகுதிக்கு வரக்கூடாது என்று சொன்னால் அவர்கள் ஜெயலலிதா அம்மையாரை நினைவு படுத்த வேண்டும். மதிமுக வின் துவக்க காலத்தில் அண்ணா அறிவாலயத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் நிலை வந்த போது அப்போது பாதுகாப்பு கொடுத்தவர் ஜெயலலிதா அம்மையார் தான். இன்றைக்கு அவர்கள் அறிவாலயத்தின் பக்கம் வந்து விடாதீர்கள் என்று கூறினால் அங்கு ஏதோ தவறு நடக்கிறது தப்பான விஷயத்தை செய்கிறார்கள் என்று தானே அர்த்தம்.
அது வேறு ஒரு விஷயம் நீங்கள் சவால் விடுகிறீர்கள் என்றால் கண்டிப்பாக நாங்கள் வருவோம். நாங்கள் ரெட் லைட் ஏரியாவா என்று கேட்டதால் அதற்காகத்தான் வருகிறீர்களா என்று அடுத்த கேள்வியை அவர்கள் கேட்பார்கள். நாங்கள் கண்டிப்பாக வருவோம் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று கூறினார். மேலும் இது தொடர்பாக அவர் பேசிய வீடியோவையும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
No comments