வலிப்பு நோயிலிருந்து விடுதலை..... நோயாளிகளை இயல்பு வாழ்க்கைக்கு மாற்றிய கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து அவர்களை அந்த நோயில் இருந்து குணப்படுத்தி, இயல்பான மற்றும் நிறைவான வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை ஏற்படுத்தி உள்ளது.
இதை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சியை ஒன்றை இம்மருத்துவமனை நடத்தியது. இதில் வலிப்பு நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்ட நோயாளிகளை தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சுதன், டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் டி எம் என் தீபக் முன்னிலையில் கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஜெமினி தலைவர் மகபூ பாஷா: ஹீலர்ஸ் நியூட்ராசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் தீபா சாத்தே, கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை மற்றும் ஐதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நாகேஸ்வர ராவ் மற்றும் கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை, நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் பிரிவு இயக்குனர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் தினேஷ் நாயக் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
No comments