• Breaking News

    பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி காலமானார்

     


    அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வாசகம். இவருக்கு 91 வயது ஆகும் நிலையில் தற்போது உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப நிறுவன இயக்குனர், இஸ்ரோ விஞ்ஞானி, திருவனந்தபுரம் தும்பா விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில் பணிபுரிந்துள்ளார்.

    நாட்டின் வளர்ச்சிக்காக மிக முக்கிய பங்கு வகித்த வாசகம் மிக இளம் வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர். இந்நிலையில் உடல்நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தவர் நேற்று பெங்களூருவில் காலமானார். இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    No comments