செங்கோட்டையில் புராதான சின்னங்களை பாதுகாக்க கோரி பாதுகாப்பு இயக்கத்தினர் போராட்டம் நடத்த திட்டம்..?
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள இந்த நுழைவு வாயில் 150 ஆண்டு காலம் பழமை வாய்ந்ததாகும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் திருநெல்வேலி கொல்லம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம் தீட்டப்பட்டு அதற்கான நிதியும் உடனடியாக ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்திற்காக செங்கோட்டையின் இந்த நுழைவு வாயில் இடிக்கப்பட இருந்த நிலையில் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடி இந்நுழைவுவாயிலை இடிக்க விடாமல் பாதுகாத்தனர்.
வேறு வழியின்றி மாற்றுப்பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக இத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டு இன்று வரை நிறைவேறாமல் இருப்பது தனி கதை. இந்த நிலையில் செங்கோட்டையின் பிரதான அடையாளமாக விளங்கும் இந்த நுழைவு வாயில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு மராமத்து பணிகள் செய்யப்படாமல் உள்ளது.
இதில் வேண்டுமென்றே அரசு அலட்சியம் காட்டுவதாக புராதன பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டை தென்காசி நகர் முழுவதும் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டி போராட்ட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். இதை அரசு கவனிக்குமா இல்லை போராட்டம் வெடிக்குமா? போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப நகரின் வளர்ச்சி முக்கியமா இல்லை புராதன அடையாளம் முக்கியமா? எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்ற நிலையில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments