• Breaking News

    செங்கல்பட்டு: நாகூர் அம்மாள் உதவும் இதயங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பில் உதவி


    செங்கல்பட்டு பகுதியில் பல நாட்களாக  ஆண் ஒருவரை பொதுமக்கள் புகார் அழித்ததன் அடிப்படையில் செங்கல்பட்டு ஆட்டோ ஓட்டுனர் முருகன் உடனடியாக நந்திவரம் கூடுவாஞ்சேரி நெல்லிக்குப்பம் சாலை கோவிந்தராஜபுரத்தில் அமைந்துள்ள நாகூர் அம்மாள் உதவும் இதயங்கள் சமூக நல அறக்கட்டளையை தொடர்பு கொண்டு அவர்களிடம் இந்த நபரைப் பற்றிய தகவலை தெரிவித்தார்.

    அப்பொழுது நாகூர் அம்மாள் சமூக நல அறக்கட்டளை சமூக ஆர்வலரும் நீயு ஆர்க்காடு பிரியாணி கடையின் உரிமையாளருமான ஹைதர் அலி,  சமூக ஆர்வலர் சுமதி அந்த ஆதரவற்ற நிலையில் இருந்த செங்கல்பட்டு பாலத்திற்கு அருகில் இருந்த ஆணுக்கு முதல் உதவி செய்து அவரை ஹைதர், பொருளாளர் சுமதி தனது சொந்த வாகனத்தில் அவரை அழைத்துச் சென்று  அவரை குன்றத்தூர் சாய் ஓல்டு ஏஜ் விடுதியில் பத்திரமாக  ஒப்படைத்தார்.

     ஆட்டோ ஓட்டுனர் முருகன் தகவல் தந்த உடனே துரித நடவடிக்கை எடுத்து அந்த ஆதரவற்ற நிலையில் இருந்த ஆணுக்கு உதவி செய்த நீயூ ஆர்க்காடு பிரியாணி உரிமையாளர் ஹைதர் அலி சமூக ஆர்வலர்  சுமதி, செயளாளர் லியாக்க்கத் அலி, துணை தலைவர் சசிகுமார் ,  நாகூர் அம்மாள் உதவும் இதயங்கள் சமூக நல அறக்கட்டளைக்கும் தனது சார்பாகவும் செங்கல்பட்டு  பொதுமக்கள் சார்பாகவும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

    No comments