• Breaking News

    சோளக்காட்டில் வச்சு கற்பழிச்சு விட்ட மாதிரி பேசிட்டு இருக்கிங்க..... சீமான் சர்ச்சை பேச்சு

     


    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்துள்ளார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததோடு கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் கூறியுள்ளார். 

    இந்த வழக்கை 12 வாரத்திற்குள் முடித்து  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டுமென்று வளசரவாக்கம் போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்று சீமான் வீட்டில் சம்மன் ஒட்டினர். அதாவது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்ட நிலையில் அதனை கிழித்ததோடு போலீசாரையும் மிரட்டியதால் அவருடைய வீட்டு காவலாளிகள் இருவரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. என்னமோ வயசுக்கு வந்து குச்சில உட்கார்ந்துட்டு இருக்க புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டில் வைத்து குண்டுகட்டாக கற்பழித்து விட்ட மாதிரி எல்லோரும் கதறிட்டு இருக்கீங்க. என் கூட மோதி ஜெயிக்க முடியல.

     என்னை பார்த்து நீ நடுங்கிட்ட. என்னை சமாளிக்க முடியல. அப்பப்போ ஒரு பொம்பளையை கொண்டு வந்து முன்னாடி நிறுத்துறீங்க. என்னமோ கல்லூரியில் படிச்சிட்டு இருக்க புள்ளைய தூக்கிட்டு போய் கற்பழிச்சவிட்ட மாதிரி. என்ன பெரிய பாலியல் வன்கொடுமை பாலியல் வன்கொடுமை என்று பேசிட்டு இருக்கீங்க. அந்த பொண்ணு சொன்னா அது உண்மையாக மாறிவிடுமா. முதலில் விசாரணை நடத்துங்க என்று கூறினார். மேலும் இன்று மாலை சீமான் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    No comments