• Breaking News

    திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

     


    முத்திரைக் கட்டணம் குறைத்து வசூலித்து அரசுக்கு ரூ.1.34 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப்பாண்டியன் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக, மதுரவாயல் அடுத்த நும்பல் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட பதிவாளர் செந்தூரப்பாண்டியனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். செந்தூரப்பாண்டியனும், அவரது மனைவியும் வீட்டில் இல்லாத போது, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    No comments