புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா..... டி.ஜெ.கோவிந்தராஜ் எம்எல்ஏ, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பங்கேற்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் மாணவிகளின் பரதநாட்டியம், திருக்குறள் பாடல், நடனம், பெண்களின் முன்னேற்றம் குறித்து பட்டிமன்றம், ஆண்டறிக்கை, கோலாட்டம், ஆங்கில நடனம், பெண் கல்வி முக்கியம் குறித்து நாடகம், கலை நிகழ்ச்சிகள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பள்ளி வகுப்பில் முதல் 3இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், முதன்மை கல்வி அலுவலர் ரவிசந் திரன், முன்னாள் சேர்மன் சிவக்கு மார், முன்னாள் ஒன்றிய கவுன்சி லர்கள் சீனிவாசன், மதன்மோகன், கணபதி, முன்னாள் மாணவர் களின் ஒருங்கிணப்பாளரும் முன் னாள் ஊராட்சி மன்ற தலைவரு மான மா.செல்வராஜ், கிராம ஒருங் கிணைப்பாளர் சுகுமார், பள்ளிக்கு சிஎஸ்ஆர் நிதி வழங்கிய தனியார் தொழிற்சாலை நிறுவன அதிகாரி கள், தனுஷ், ராஜேந்திரன், பள்ளி தலைமை பழனி வேலன், உதவி தலைமை ஆசிரியர் லோகநாதன், மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் என பலர் கலந்து கொண்ட னர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜான்சி பியூலா நன்றி கூறினார்.
No comments