• Breaking News

    புதிய வருமான வரி மசோதா..... மக்களவையில் தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

     


    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் புதிய வருமான வரி சட்ட முன் வடிவை தாக்கல் செய்துள்ளார். அந்த முன் வடிவு ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலை குழுவுக்கு அனுப்பப்பட உள்ளது. புதிய மசோதாவில் வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் படியான வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீளமான சொற்களுக்கு பதில் சிறிய சொற்கள் இடம் பெற்றுள்ளது.

    முந்தைய ஆண்டு, மதிப்பீட்டு ஆண்டு ஆகிய சொற்களுக்கு பதில் வரி ஆண்டு என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் விளக்கமளித்துள்ளார். கடந்த 1961-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வருமான வரி சட்டம் 880 பக்கங்கள் கொண்ட நிலையில் புதிய வருமான வரி மசோதா 662 பக்கங்களில் அடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    No comments