நாம் தமிழர் கட்சியிலிருந்து நாடாளுமன்ற தொகுதி மண்டல செயலாளர் விலகல்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறி சமீப காலமாக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் விலகினர். சமீபத்தில் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர் விலகினர்.
இப்படி சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகி வரும் நிலையில் தங்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை எனவும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும், சீமான் தங்களை மதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு நிர்வாகி நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மண்டல செயலாளர் மகேந்திரன் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். மேடையில் சமூக நீதியும் ஜனநாயகமும் பேசும் சீமான் கட்சியில் அதை கொன்று விட்டதாக மகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
No comments