கும்மிடிப்பூண்டி: கவரப்பேட்டையில் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிவே ஆனந்தகுமார் தலைமை யில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கவரப் பேட்டை பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் பங்கேற்றார் கூட்டத்தில் நிர்வாகிகள் வரும் தேர்தலை எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது .
முடிவில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வராக மீண்டும் மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சராக பதவி ஏற்க உறுதி ஏற்போம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் திருமலை, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், மற்றும் இளைஞர் அணி நிர்வாகி கள் சுரேஷ், ஜோதி, அந்தோணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments