• Breaking News

    கம்பம் கம்பராயப்பெருமாள் கோவில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்தாரை அறிவுறுத்திய தேனி எம்.பி



    கம்பத்தில் பிரசித்தி பெற்ற கம்பராயப் பெருமாள், காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அதிகளவில் திருமணம் நடைபெறுகிறது.இந்நிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 3.75 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.  இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பணிகள் திடிரென பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி தேனி எம்.பி தங்கதமிழ்செல்வன் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் கட்டுமான பணிகள் ஏன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ? என கேள்வி எழுப்பியபோது ஒப்பந்ததாரர் நகராட்சி சார்பில் நகரமைப்பு அனுமதி பெற்று கட்டுமான பணிகள் தொடங்க வேண்டும் என செயல் அலுவலருக்கு அறிவுறுத்தியதால் கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாக தெரிவித்தார். அப்போது நகரமைப்பு அனுமதி பெற விண்ணப்பிக்குமாறும் அதற்கான அனுமதி பெற்று தருவதாக கூறினார். அனுமதி கிடைத்தவுடன் 4 மாதங்களுக்குள் கட்டுமான பணிகளை விரைந்து முடிப்பதாக கூறினார். 

    ஆனால் 2 மாதங்களாகியும் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை, இதையடுத்து நேற்று கம்பராயப்பெருமாள் கோவில் செயல் அலுவலகத்திற்கு வந்த அவர் செயல் அலுவலர் அருணாதேவி மற்றும் ஒப்பந்ததாரரிடம் கட்டுமான பணிகள் ஏன் தொடங்கவில்லை ? கடந்த முறை ஆய்விற்கு வந்தபோது 4 மாதங்களில் கட்டிடப் பணிகளை விரைந்து முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு தருவதாக உறுதி அளித்த  ஒப்பந்ததாரர், கட்டி பணிகளை ஏன் மேற்கொள்ளவில்லை ? தற்போது கட்டிட அனுமதி கையில் கிடைத்தால் தான் கட்டுமான பணிகள் தொடங்குவேன் என மாற்றி பேசுகிறார் .இது சரியில்லை என ஒப்பந்தாரரை எச்சரித்த அவர் நகரமைப்பு அனுமதிக்காக காத்திருக்காமல்  மக்கள் பயன்பாட்டிற்கு திருமண மண்டபத்தை விரைந்து முடியுங்கள்.  நாளை திங்கள் முதல் நிறுத்தப்பட்ட கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பிறகு ஒப்பந்ததார் பணிகளை தொடங்குவதாக உறுதியளித்து சென்றார்.

    No comments