• Breaking News

    சேலம்: அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆய்வகப் பணியாளர்

     


    சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் முதல்வருக்கு ஒரு புகார் அனுப்பியுள்ளனர். அதாவது அங்கு ஆய்வக பணியாளராக வேலு (57) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தங்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக மாணவிகள் தங்கள் புகாரில் கூறியுள்ளனர். இந்த புகாரின் படி கல்லூரி முதல்வர் விசாரணை செய்ய ஒரு தனி குழுவை அமைத்த நிலையில் வேலு மீதான குற்றச்சாட்டு உண்மை என்பது நிரூபிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வேலுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் தமிழ்நாட்டில் சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடந்ததாக வந்த தகவல் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments