ஈரோடு-செங்கோட்டை ரெயில் மேட்டூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்..... ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
ஈரோடு-செங்கோட்டை ரெயில் மேட்டூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்து.
மேட்டூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வணிகவியல் பயண சீட்டு எழுத்தர் அகில் ஆனந்த் தலைமை வகித்தார். ஆலோசனை குழு உறுப்பினர்கள் சிவமணிகண்டன் நவரத்தினம், சதிஷ் குமார், கஜேந்திரன், கார்த்திகேயன் மற்றும் பொன்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மேட்டூர் ரயில் நிலையத்தில் ஈரோடு - செங்கோட்டை, செங்கோட்டை - ஈரோடு வண்டி நின்று செல்ல வேண்டும். நடைமேடையை நீட்டிப்பு செய்ய வேண்டும். பயணிகளுக்கு கூடுதலாக நிழற்குடை அமைக்க வேண்டும். மேட்டூர் ரயில்வே பீடர் ரோடை சீர் செய்ய வேண்டும். பயணிகளுக்கு கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். பயணிகள் ஏறும் நடைமேடை உடைந்த சிலாப்புகளை சரி செய்து தர வேண்டும். ரயில் நிலையத்திற்கு வரும் நுழைவுப் பகுதியில் இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் பயணிகளுக்கு சிரமமாக இருப்பதால் கூடுதலாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும். ஊனமுற்றோர்களுக்காக அமைக்கப்பட்ட தண்ணீர் குழாய் சரி செய்து தர வேண்டும். மேட்டூர் வழியாக நெல்லை - கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments