• Breaking News

    கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சண்முகநாதன் கோயிலில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது


    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி சண்முகநாதன் அணை அருகே பசுமலை சாரலில் மேற்கு தொடர்ச்சி மலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சண்முகநாதன் பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த அந்த கோயிலில் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள் ஆன தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று தைப்பூச தின விழாவை முன்னிட்டு திருக்கோயில் மண்டல பூஜை, யாகாலய ப்ரவேசம், யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் மற்றும் மகா அபிஷேகமும் நடைபெற்றது. காலை முதலே மூலவர் பாலதண்டாயுதபாணி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்த கோவிலில் வருகை தரும் சுமார் 20,000 மேற்பட்ட பக்தர்களுக்கு கோவில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    No comments