முடிச்சூர் ஊராட்சி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் டாக்டர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை மேற்கு ஒன்றிய முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் அவர்களின் ஏற்பாட்டில் ஒரு கிலோ அரிசி, ஆறு வகையான காய்கறிகள், புடவை மற்றும் சிக்கன் பிரியாணி 200 நபர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, பரங்கிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து சுமார் 120 நபர்களுக்கு புடவை, ஒரு கிலோ அரிசி, ஆறு வகையான காய்கறிகள் மற்றும் அறுசுவை உணவு சிக்கன் பிரியாணி 200 நபர்களுக்கு வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் பி.கே.பரசுராமன் பகுதிகழகச் செயலாளர் கோபிநாத் மற்றும் முடிச்சூர் கழக நிர்வாகிகள் தவமணி, மூர்த்தி, ராஜேந்திரன், கஜேந்திரன், சீனிவாசன், ரமேஷ், சீனிவாசன், சர்குணம், ஜெயச்சந்திரன், திருமலை, கலை, சரவணன், காசி கண்ணன், நன்தன், சிவா, மூர்த்தி, பாக்கியராஜ், கற்பகம் சீனிவாசன், அமுதா மூர்த்தி, புவனேஸ்வரி, பிரியா, மஞ்சுளா சிட்டி அபு, மதி வட்ட கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments