நீங்களே பொய் சொல்லலாமா ப்ரோ..? தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை பதிலடி
தமிழகத்தில் மும்மொழி கொள்கை கொண்டுவரப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் எந்த பள்ளியிலும் படிக்கலாம் அது அவர்களுடைய தனிப்பட்ட உரிமை. அதனைப் போலவே எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக மாநில அரசின் மொழிக் கொள்கையையும் கல்விக் கொள்கையையும் கேள்விக்குறியாக்கிவிட்டு வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால், அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி ப்ரோ என்று கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விஜய் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் கெட் அவுட் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில 30 நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகிச் சென்று விட்டார்.
அதற்கான மரியாதை அங்கேயே தெரிந்து விட்டது. விஜய்க்கு ஆலோசனை சொல்லும் பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கையும் அனைவருக்கும் காட்டி கொடுத்து விட்டது. அதனால் எங்கேயும் யாரும் மொழியை திணிக்கவில்லை. நீங்களே பொய் சொல்லலாமா ப்ரோ?. பிரசாந்த் கிஷோருக்கு ஒரு கேள்வி. அவர் ஏன் திமுகவை ஆட்சியில் அமர்த்தினார்? அதற்காக மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் உங்களுக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
No comments