• Breaking News

    காஷ்மீரில் பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


     ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் உதம்பூர் மாவட்டத்தில் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் திக்ரி பகுதியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்புப்பணியில் வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரவீன் பாட்டில் என்ற வீரரும் அடக்கம்.

    இந்நிலையில், வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்புப்படை வீரர் பிரவீன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் பிரவீனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரவீன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக எல்லைப்பாதுகாப்புப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments