• Breaking News

    பொது அறிவு கூட தெரியாத அவன் கட்சியில நீ இருக்கிறியே..... விஜயை சீண்டிய பிரபல திமுக சர்ச்சை பேச்சாளர்

     


    திமுக கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் தற்போது நடிகர் விஜய்யை முட்டாள் என்று விமர்சித்துள்ளார். இது பற்றி ஒரு பொது மேடையில் அவர் பேசியதாவது, கோயம்பேட்டில் ஒரு ஆட்டோவை பார்த்தேன். அதில் புல்லை பார்த்தால் மான் துள்ளும். நீரை பார்த்தால் மீன் துள்ளும். என் தளபதியை பார்த்தால் துள்ளாத மனமும் துள்ளும் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் நான் அந்த ஆட்டோவில் சவாரிக்காக ஏறிக்கொண்டேன். அந்த ஆட்டோ ஓட்டுநரை சும்மா திட்ட முடியாது அல்லவா அதனால் சவாரி ஏறிக் கொண்டேன். பின்னர் அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் நான் சொன்னேன் புல்லை பார்த்தால் மான் துள்ளது மேயத்தான் செய்யும்.

    புல் இல்லாத இடத்தில் தான் ஒன்றுமே இல்லையே என நினைத்து மான் துள்ளும். இதேபோன்று நீரை பார்த்தால் மீன் துள்ளாது. அந்த நீரில் இருந்து தூக்கி கீழே போட்டால் தான் அந்த மீன் துள்ளும். இந்த பொது அறிவு கூட தெரியாத அவன் கட்சியில் நீ இருக்கிறியே நீ ஒரு முட்டாள் அவன் ஒரு முட்டாள் என்று கூறினார். உடனடியாக அந்த ஆட்டோ ஓட்டுநர் நான் திமுகவுக்கு வந்து விடுகிறேன் என்று என்னிடம் கூறினார். நான் எப்படி ஒரு ஓட்டை சேர்த்தேன் பார்த்தீர்களா என்று கூறினார். மேலும் தளபதியை அவர் முட்டாள் என்று விமர்சித்துள்ளது ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    No comments