• Breaking News

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் மறைந்த மூத்த நிர்வாகிக்கு மரியாதை செலுத்தி திமுகவினரை சந்தித்தார்


    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ்அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் கிராமத்தில் உள்ள மறைந்த எம்எல்ஏவும், திமுக முத்த தலைவருமான கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் இல்லத்திற்கு வருகை தந்தார்.

    தொடர்ந்து கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிலையில் பண்பாக்கத்திற்கு வந்த திமுக மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கே.ரமேஷ் ராஜிற்கு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார், திமுக மாவட்ட துணை செயலாளர் உமா மகேஸ்வரி சால்வை அணிவித்து  வரவேற்றனர்.

    இந்த நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் பகலவன், கொள்கை பரப்பு துணை செயலாளர் வழக்கறிஞர் அன்பு வாணன் பொதுக்குழு உறுப்பினர் பா.செ. குணசேகரன், திமுக மாவட்ட தொண்டர் அணி தலைவர் முத்துக்குமரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வேணுகோபால், ஒன்றிய நிர்வாகிகள் புலியூர் புருஷோத்தமன், பிரபு கொள்ளானூர் வெங்கடேசன், மூர்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்துசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் அமலா சரவணன், ஜோதி உள்ளிட்டோர் மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜிற்கு சால்வை அணிவித்து  வாழ்த்து தெரிவித்தனர் .

    No comments