தவெகவில் திருநர் விங் பிரிவு..... திருநர் இயக்க செயல்பாட்டாளர் எதிர்ப்பு.....
விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. அதில் கட்சி கொள்கைகளும், தாங்கள் பின்பற்ற உள்ள தலைவர்களையும், அதற்கான காரணங்களையும் விஜய் அறிவித்தார். இதனை தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் உத்வேகம் அடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சீரான இடங்களில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி புதிய மாவட்ட செயலாளர்களை விஜய் நியமித்து வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர், சிடி நிர்மல் குமாருக்கு துணை பொதுச்செயலாளர் . நடிகர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் என முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது.
இதற்கிடையில்தேர்தல் வியூகர் பிரஷாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்து பேசி அறிக்கை ஒன்றை வழங்கியள்ளாராம். அந்த அறிக்கையில் தமிழகத்தில் தவெக கட்சிக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கும். எந்த வயதினர் வாக்களிப்பார்கள் எந்த வயதினர் அளிக்கலாமா வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். எந்த பகுதியில் விஜய் கட்சிக்கு மேலும் செல்வாக்கு இருக்கிறது? உள்ளிட்டவை குறித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த பரபரப்பு அறிக்கையை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் விஜயிடம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே சிறார் அணி, பெண்கள் அணி, திருநங்கைகள் பிரிவு, காலநிலை ஆய்வு பிரிவு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பிரிவு என 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் திருநங்கைகளுக்கான பிரிவு 9 ஆம் இடத்தில உள்ளது. இந்நிலையில் பிரபல தேர்தல் திருநர் இயக்க செயல்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் விஜய் திருநர் விங் என்று துவங்கியிருப்பது நல்ல விஷயம். அதை ஒன்பதாம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய தேவை என்ன? இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் தாண்டா இந்த 9 எனும் இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும். இந்த பாடாவதி டார்க் ஜோக்கை உங்களின் படங்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள் விஜய் அண்ணா. இதையும் நாங்களே தான் மாரிலும் வயிற்றிலும் அடித்து கேட்க வேண்டும். தமிழ் கூறும் அறிவு ஜீவிகள் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க ப்ளீஸ்” என்று பதிவிட்டுள்ளார்.
No comments