• Breaking News

    மயிலாடுதுறை: ஏ.வி.சி கல்லூரியில் முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சி துறை வரலாற்று மன்றக் கூட்டம் நடைபெற்றது


    மயிலாடுதுறை ஏ. வி. சி. கல்லூரி முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சி துறை வரலாற்று மன்றக் கூட்டம் நடைபெற்றது.வரலாற்றுத் துறை தலைவர்  பேராசிரியர் முனைவர் ஆர்.சாந்தி வரவேற்றார் .கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். நாகராஜன் முன்னிலை வகித்து பேசும்போது வரலாறு படிக்க வேண்டியதன் அவசியம், வரலாற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

     சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி அருங்காட்சியக காப்பாளர் பி. மணிமுத்து பங்கேற்றார். அவர் பேசும்போது அகழாவுய்வு என்றால் என்ன? தொல்லியல் சான்றுகள் என்றால் என்ன? அருங்காட்சியகத்தின் பயன்கள், வகைகள் குறித்து பேசினார். வரலாற்று துறை மற்றும் முதுகலை தமிழ் துறை மாணவர்கள், பிற துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.முனைவர் வி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை வரலாற்று துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


    No comments