போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்
கத்தோலிக்க தலைமை மத குரு போப் பிரான்சிஸ். இவருக்கு 88 வயது ஆகும் நிலையில் தற்போது தீவிர உடல் நல பாதிப்பின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் அவருடைய உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தற்போது வாடிகன் செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பதால் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடைய உடல்நிலை தொடர்ந்து மோசம் அடைந்தாலும் அவருடைய உற்சாகம் மட்டும் குறையவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
No comments