கீழப்பாவூரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிவாஜி மன்ற தலைவருக்கு காங்கிரஸ் சார்பில் நிதியுதவி
கீழப்பாவூரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிவாஜி மன்ற தலைவருக:கு காங்கிரஸ் சார்பில் நிதியுதவியினை நிர்வாகிகள் வழங்கினர்.
கீழப்பாவூரை சேர்ந்த சிவாஜி மன்ற தலைவர் சுப்பிரமணிய பிரபு என்பவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி அறிந்த கீழப்பாவூர் காங்கிரஸ் நிர்வாகிகளான மாவட்ட துணைத்தலைவர் செல்வன், சுப்பிரமணியன், பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர் ஆகியோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்ததுடன், காங்கிரஸ் கட்சி சார்பில் நிதியுதவியினையும் வழங்கினர். மேலும் மேல் சிகிச்சைக்கான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர்.
அப்போது இலக்கிய அணி நகர தலைவர் ராமசாமி, சிவசுப்பிரமணியன், நயினார், சுரேஷ் முருகன், பேரூராட்சி கவுன்சிலர் கோடீஸ்வரன், வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சின்னராஜா, ஆலங்குளம் சட்டமன்ற ஓ.பி.சி தலைவர் தாமோதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
No comments