• Breaking News

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது

     


    ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் விசி சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடும் நிலையில் பிற கட்சிகள் போட்டியிடவில்லை. 

    இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று மாலை 6:00 மணியுடன் பிரச்சாரம் ஓய்வடைகிறது. இதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் பிப்ரவரி 8ஆம் தேதியும்  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.

    இந்நிலையில் இன்று மாலை தேர்தல் பிரச்சாரம் நிறைவடைவதால் அதற்கு பிறகு அனுமதி இன்றி அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. அதன்படி தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. 

    சமூக வலைதளம் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடாது. மேலும் இதை மீறினால் 2 வருடங்கள் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். இல்லையெனில் இரண்டும் சேர்ந்தே விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

    No comments