பெரியாரை ஏற்றுக் கொள்ளும் என் தம்பிகள் தாராளமாக என்னை விட்டு விலகி செல்லலாம் - சீமான்
திருச்சி விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,இடைத்தேர்தலில் பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் எனக்கு தான் ஓட்டு போட்டார்கள் என்று நீங்கள் எதை வைத்து சொல்கிறீர்கள். அவர்கள் நான் வளர வேண்டும் என்று விரும்புவார்களா. அப்படி எனில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவர்கள் ஓட்டுகளும் எனக்குத்தான் விழுந்ததா.? அவர்கள் 15 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளனர். ஆனால் நான் தனித்து நின்று போட்டியிட்டு இவ்வளவு வாக்குகளை பெற்றுள்ளேன் என்றார். அதன் பிறகு பெரியார் பற்றிய கேள்விக்கு பிரபாகரனே வந்து சொன்னாலும் நான் பெரியாரை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றார்.
அதன் பிறகு பிரபாகரன் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் கண்டிப்பாக பெரியாரை ஏற்றுக் கொள்ள மாட்டேன். பெரியாரை ஏற்றுக் கொள்ளும் என்னுடைய தம்பிகள் தாராளமாக என்னை விட்டு விலகி செல்லலாம் என்று கூறினார். மேலும் முன்னதாக பெரியார் பற்றி சீமான் தொடர்ந்து விமர்சனங்கள் செய்து வரும் நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதோடு சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் தற்போது சீமான் இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments