• Breaking News

    பெரிய மங்கோடு அருள்மிகு படவேட்டு அம்மன் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்,பெண் பக்தர்கள் அலகு குத்தி, தீமிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்


    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே  பெரிய மங்கோடு கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ படவேட்டு அம்மன்   ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் மாலை அணிந்து  காப்பு கட்டி விரதம் இருந்தனர். 

    அதனைத் தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ படவேட்டு அம்மன்  அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.அதனை தொடர்ந்து  120 க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள்  அலகு குத்தி தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 

    இதில் ஊர் பெரியவர்கள் இளைஞர்கள் கோவில் நிர்வாகிகள் மீனவர் சங்க பிரதிநிதி மாங்கோடு மோகன் மற்றும் பொன்னேரி ,கும்மிடிப்பூண்டியை சேரந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  சாமி தரிசனம் செய்தனர்.

    No comments