பாஜக தேர்தல் வாக்குறுதி..... யமுனை ஆற்றை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
சமீபத்தில் டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் யமுனை நதியை சுத்தம் செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்த பாஜக டெல்லியில் ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில் தற்போது யமுனை நதியை சுத்தம் செய்யும் பணியை டெல்லி பாஜக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லி கவர்னர் அலுவலகம் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறியதாவது யமுனை, ஆற்றை சுத்தம் செய்யும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. நீரில் மிதக்கும் குப்பைகளையும், ஆக்கிரமிப்பு செடிகளை அகற்றவும், நீர்நிலைகளின் அடிப்பகுதி மண்ணை அகற்றவும் வேலைகள் நடைபெற்று வருகிறது. டெல்லியின் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை துணைநிலை கவர்னர் சக்சேனா சந்தித்தார். அப்போது உடனே யமுனை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை தொடங்க உத்தரவிட்டிருந்தார் என்று தெரிவித்துள்ளது.
No comments