நாளை தேர்வு..... ஹால் டிக்கெட் வரவில்லை..... கலெக்டர் அலுவலகம் முற்றுகை
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் பட்டுக்கோட்டை தனியார் பள்ளியில் ஹால் டிக்கெட் வரவில்லை என புகார் எழுந்துள்ளது. சம்மந்தப்பட்ட பள்ளியின் மீது வழக்கு உள்ளதால் 19 மாணவர்களின் ஹால் டிக்கெட் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாளை தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோருடன் மாணவர்கள் ஹால் டிக்கெட் கேட்டு குவிந்தனர். இந்த நிலையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான அங்கீகாரம் இல்லாமல் பள்ளி நிர்வாகம் ஒரு வருடமாக பாடங்கள் நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. எனவே ஹால் டிக்கெட் பெறுவது சிக்கல் ஏற்பட்டதால் மாணவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
No comments