• Breaking News

    மும்மொழி கொள்கையை கேள்வி கேட்கும் தவெக தலைவர் விஜயின் மகன் எங்கு படித்தார்...? ஹெச்.ராஜா கேள்வி

     


    மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மும்மொழி கொள்கையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மும்மொழி கொள்கையை கேள்வி கேட்கும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் மகன் எங்கு படித்தார் என கேள்வி எழுப்பியுள்ளார். அவரது மகன் சமச்சீர் பள்ளியில் படித்தாரா? அல்லது இரு மொழிக் கொள்கை கொண்ட பள்ளியில் படித்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பிள்ளைகளை மட்டும் வேறு மொழி படிக்க கூடாது என விஜய் தடுப்பதாக எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

    No comments