பெண் நடத்துனர் பணிக்கு உயரத்தினை குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு
பேருந்து நடத்துனர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான உயரத்தை 160 சென்டிமீட்டரில் இருந்து 150 சென்டிமீட்டராக குறைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் குறைந்தபட்ச உயரம் 160 சென்டிமீட்டர் என இருப்பதால் நடத்துனர் பணிக்கு குறைவான பெண்களே தேர்வாவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
அதனை கருத்தில் கொண்டு தற்போது நடத்துனர் பணிக்கு தேர்வாகும் மகளிருக்கான உயரத்தை 150 சென்டிமீட்டராக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பனிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துனர் பணி அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
No comments