• Breaking News

    திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளரும்,பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது


    திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அவசர ஆலோசனை கூட்டம்  திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன் தலைமையில் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும்  ஆலோசிக்கப்பட்டது. 

    மேலும் நாளை நடைபெற உள்ள இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் இலக்கு 2026 லட்சிய மாநாட்டில் பெருந்திரளாக  கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் கழக மாணவரணி சார்பில் வருகின்ற 18ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில்  பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்  என ஆலோசிக்கப்பட்டது.

     இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே எஸ் விஜயகுமார் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டி சி மகேந்திரன், மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கோபால் நாயுடு, நகர செயலாளர் செல்வகுமார் ,பட்டாபிராமன், எஸ்டிடி ரவி, துணை செயலாளர் அபிராமன், விவசாய பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் சேர்மன் கே எம் எஸ் சிவக்குமார்,  முல்லைவேந்தன், மாணவரணி துணை செயலாளர் சேதுபதி, இணை செயலாளர் ஸ்ரீதர் ,எட்டியப்பன் ,சிராஜ், சோழவரம் ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத் ,இமயம் மனோஜ் ,பாசறை யுவராஜ் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம் ,சத்தியமூர்த்தி ,எஸ் பி அருள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    No comments