• Breaking News

    சென்னை: ரயில் தண்டவாளத்தில் கிடந்த காதல் ஜோடி சடலம்....

     


    சென்னை பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இரண்டு பேரின் சடலங்கள் கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் கடலூரைச் சேர்ந்த விக்ரம் (25) மற்றும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி (23) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் காதலர்கள்.

    இவர்கள் இருவரும் கடந்த வருடம் படிப்பு முடிந்த பிறகு சென்னைக்கு வேலைக்கு வந்த நிலையில் பெருங்களத்தூர் பகுதியில் தனித்தனியாக அறை எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் நேற்று முன் தினம் வேலை முடித்துவிட்டு தங்களுடைய அறைக்கு செல்வதற்காக வந்த நிலையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்தனர்.

     அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த நிலையில்  இருவரும் சம்பவ இடத்தில் இறந்தனர். மேலும் கவன குறைவாக இருவரும் தண்டவாளத்தை கடந்ததால் ரயில் மோதி  இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    No comments