• Breaking News

    தமிழ்நாடு கலவர பூமியாக மாறும்..... அரசுக்கு அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை

     


    சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று தமிழ்நாடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர மற்றும் அவசிய தேவைகள் பற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்ட தலைமை தாங்கினார். அப்போது மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், இங்கு மேடையில் கூடியுள்ள நாங்கள் அரசியல் ரீதியாக வெவ்வேறு கருத்துக்கள் கொண்டு இருந்தாலும் சமூகநீதி என்ற கருத்தின் அடிப்படையில் ஒன்று கூடி உள்ளோம்.

    இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவீத இட ஒதுக்கீடு என்பது இருக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். அவர்தான் சட்டப் பாதுகாப்பு கொடுத்து இதனை காப்பாற்றினார். தமிழகத்தில் விரைவாக ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றம் மூலமாக 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்தாகும் அபாய நிலை தான் தற்போது நிலவுகிறது.

    ஒருவேளை தமிழகத்தில் இருக்கின்ற 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அதனைப் பார்த்துக் கொண்டு நாங்கள் ஒருபோதும் சும்மா இருக்க மாட்டோம். 69 சதவீத இட ஒதுக்கீடு 50 சதவீத இட ஒதுக்கீடாக குறைக்கப்பட்டால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறும் நிலை ஏற்படலாம். தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வெளிநாட்டு பறவைகள் மற்றும் ஆமைகள் என அனைத்திற்கும் கணக்கெடுப்பு எடுக்கப்படும் போது ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவசியம்தான். தமிழக அரசு விரைவாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    No comments