புதுக்கோட்டை: அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.... உடற்கல்வி ஆசிரியர் கைது
தமிழகத்தில் சமீப காலமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அன்னவாசல் அருகே கிளிக்குடி பெருமாள் பட்டி பகுதியில் ஒரு அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் கே அடைக்கலம் (44) என்பவர் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர் விளையாட்டு பயிற்சி கொடுக்கும் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவர் விளையாடும்போது பந்துகளை எடுத்துக் கொடுப்பது போல் மாணவிகளை தவறாக தொடுதல் மற்றும் பேசும்போது முகத்தைப் பார்த்து பேசாமல் உடம்பை பார்த்து பேசுதல் என பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் பற்றி 16-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் கொடுத்தனர். இவர் மீதுபுகார் கொடுக்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்டது உண்மை என்பது தெரிய வந்ததால் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments