• Breaking News

    கீழப்பாவூர் நாடார் இந்து தொடக்கபள்ளியில் அறிவியல் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது


    கீழப்பாவூர் நாடார் இந்து தொடக்கபள்ளியில்  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது

    பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் அமைந்துள்ள நாடார் இந்து தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் மணிவேலன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் தங்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்திடும் வகையில் எரிமலை, காற்றாலை, பசுமை வீடு, கணினி, 3 டி, சோலால் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    இப்படைப்புகள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இதனை காண வந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் தங்களது படைப்புகள் செயல்பாடுகள். பயன்கள் குறித்து விளக்கி கூறினர். இதில் அனைத்து ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    No comments