• Breaking News

    பைக்கில் எதிர்திசையில் அதிவேகமாக வந்த வாலிபர்கள்..... துடிதுடித்து இறந்த தம்பதி

     


    கேரள மாநிலத்தில் உள்ள பொத்தங்கோடு பகுதியில் திலிப்(40)- நீத்து(38) தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 15-ஆம் தேதி இரவு கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் இரண்டு வாலிபர்கள் அதிவேகமாக வந்தனர். இந்நிலையில் எதிர்பாராதநேரத்தில் வாலிபர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திலீப்பின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சச்சின், அபூயட்டி ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த திலீப் மற்றும் நீதுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments