தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாக குழு கூட்டம் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு
தென்காசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாக குழு கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட தலைவர் எம்.அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் செய்யது பட்டாணி வரவேற்றார் அமைப்பு செயலாளர் அப்துல் காதர் இறைமறை வசனம் ஓதினார்.
மாநில செயலாளர் நெல்லை மஜீத், துணைத்தலைவர் முகம்மது இஸ்மாயில், மாணவர் அணி தேசிய துணை தலைவர் முஹம்மது அல் அமீன், விவசாய அணி மாநில செயலாளர் முகம்மது அலி பிரவாசிலிக், மாநில பொதுச் செயலாளர் ஹபிபுல்லாஹ்,வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஜாகிர் அப்பாஸ்,தொழிலாளர் அணி மாநில துணைத்தலைவர் மைதீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் மடத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சையது இப்ராஹிம், மாவட்ட துணைத் தலைவர் முகமது முஸ்தபா, துணைச் செயலாளர் ஹைதர் அலி,கடையநல்லூர் நகர தலைவர் நல்லாசிரியர் சையது மசூது, செயலாளர் ஆசிரியர் முஸ்தபா ,பொருளாளர் ஜபருல்லா, தென்காசி நகர தலைவர் அபூபக்கர், புளியங்குடி நகர தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் ஷேக் காதர் மைதீன், வாசுதேவநல்லூர் நகர தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் செய்யது இளைஞரணி தலைவர் சையது அபுதாஹிர்,மாணவர் அணி தலைவர் ரிபாய், வர்த்தக அணி தலைவர் அகமது மீரான், தொழிலாளர் அணி தலைவர் இஸ்மாயில், மகளிர் அணி தலைவர் சையத் அலி பாத்திமா, விவசாய அணி தலைவர் அப்துல் ரகுமான், விவசாய அணி செயலாளர் அபுல் ஹசன் சாதலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மே 18ந்தேதி கடையநல்லூரில் மாவட்ட மாநாட்டினை நடத்துவது, வரும் 28ந்தேதி தென்காசியில் அனைத்து மாவட்ட அணிகளின் ஆலோசனை கூட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. முடிவில் தொழிலாளர் அணி மாவட்ட பொருளாளர் இஸ்மாயில் நன்றி கூறினார்.
No comments