• Breaking News

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்



    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், டி. எஸ் .ஆர். சுபாஷ் தலைமையில் தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம், ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு உடனடியாக பத்திரிக்கையாளர் நல வாரியத்தை சீரமைக்க வேண்டும் , தாலுகா அளவில் மற்றும் மாவட்ட அளவில் உள்ள பத்திரிகையாளர்களை நலவாரியத்தில் இணைக்க வேண்டும், முதலாளிகளைக் கொண்டு இயங்கி வரும் நல வாரியத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் நலவாரியத்தில் பத்திரிக்கையாளர்கள் இணைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பத்திரிக்கையாளர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மேற்கண்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி கோரிக்கை மனுவாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் டி.எஸ். ஆர். சுபாஷ் வழங்கினார்.

    ஆட்சியரிடம் பத்திரிகையாளர் சங்க தலைவர் பேசுகையில் கூறுகையில் இந்த மனுவை நீங்கள் பத்திரிகையாளர்கள் வழங்கிய இந்த மனுவினை தமிழக அரசுக்கு வழங்கி அனுப்பி மாவட்ட அளவில் மற்றும் தாலுகா அளவில் பல்வேறு இன்னல்களுக்கு இடையே கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு விடிவு ஏற்படுத்தும் வகையில் பத்திரிக்கையாளர் நல வாரியத்தை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.மாவட்ட ஆட்சியர் உடனடியாக அரசின் கவனத்திற்கு உங்கள் கோரிக்கையை அனுப்புகிறேன் என்று தெரிவித்தார் மாவட்ட ஆட்சியருக்கு அனைத்து பத்திரிகையாளர்களும் நன்றி தெரிவித்தனர். 


    இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பொன்னேரி பாலகிருஷ்ணன், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வினோத்குமார், மாவட்ட செயலாளர் தமிழன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மில்டன், செயலாளர் அருள் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர் கும்மிடிப்பூண்டி பொன்னேரி நிருபர்கள் 30.க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில் இறுதியாக  திருவள்ளூர் மேற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன். நன்றி கூறினார்.

    No comments