ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் கைது
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியை போலீசார் கைது செய்து வீட்டுக் காவலில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரமுல்லா செக்போஸ்டில் லாரி டிரைவரை பாதுகாப்பு படையினர் அண்மையில் சுட்டு கொலை செய்தனர்.
மேலும் கதுவாவில் போலீஸ் காவலில் இருந்த வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முக்தி சந்திக்க திட்டமிட்டு இருந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments