அதிமுக யாருக்கு..... தேர்தல் ஆணையம் விசாரிக்கலாமா...? கூடாதா...? இன்று தீர்ப்பு
அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் ஓ. பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் 4 வருட ஆட்சியை தக்க வைத்தனர். இதைத்தொடர்ந்து திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு அதிமுகவில் மீண்டும் உட்க்கட்சி பூசல் வெடித்தது. ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக பிரிந்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்ததால் அதிமுகவின் பொதுச்செயலாளராக மாறினார்.
ஆனால் இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் பிரச்சனை இல்லை எனவும் பெரும்பாலான தொண்டர்கள் தனக்கு தான் ஆதரவு கொடுப்பதாகவும் இது பற்றி விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் ரவீந்திரநாத் பெரும்பாலான தொண்டர்கள் ஓ. பன்னீர்செல்வத்தின் பக்கம்தான் இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் இது பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார். மேலும் இந்த வழக்கில் வாதங்கள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று தேர்தல் ஆணையம் அதிமுகவின் உட்கட்சி பூசல்கள் குறித்து விசாரிக்கலாமா இல்லையா என்பது குறித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
No comments