• Breaking News

    தலைஞாயிறு வட்டாரத்தில் சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு புத்தாக்க பயிற்சி


    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் இந்தாண்டு 2024- 2025 ஆண்டுக்கான சமுதாய சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 08.02.24 முதல் 10.02.24 வரை இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது.


     இந்த பயிற்சி மகளிர் திட்ட மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி அவர்கள் பயிற்சி அளித்தார். இதில் வட்டார இயக்க மேலாளர் பிரேமா வரவேற்புரை ஆற்றினர்.உதவி திட்ட அலுவலகள் சந்திரசேகரன் மற்றும் சண்முக வடிவு முன்னிலையில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களின் ஆதார மையம் அலுவலர் சீனுவாசன் அவர்கள் குத்துவிளக்கேற்றி  பயிற்சி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.


      இதில் மகளிர் திட்டத்தின் சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் பொறுப்புகள் கடமைகள் நிர்வாக அமைப்புமுறை, திட்டத்தின் கோட்பாடுகள்,  குழுவின் வகைகள், பஞ்சசூத்திரா, விடுப்பட்ட இலக்கு மக்கள் குழுவில் இணைத்தல், பயிற்சி அளித்தல், தர ஆய்வு, தரமதிப்பீடு, வங்கி இணைப்பு, காப்பீடு செய்தல், சுயஉதவிக் குழுக்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் இணைத்தல்,இணையதளத்தில் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோருக்கு அரசு திட்டங்கள் பெற்று தருதல். இளைஞர்களுக்கு பயிற்சி கூடிய வேலை வாய்ப்பு அளித்தல், பதிவேடுகள் பராமரித்தல்,உரிமைச் சார்ந்த திட்டங்கள் வாழ்வாதார திட்டங்கள், சமூக மேம்பாடு, போன்றவை பயிற்சி அளிக்கப்பட்டது. 24 ஊராட்சியில் சமுதாய சுய உதவிக்குழு பயிற்று நர்கள் கலந்து கொண்டார்.

    No comments