• Breaking News

    ஆலங்குளத்தில் வாரிசு இல்லா சொத்தினை அரசுடமையாக்க வேண்டும்.... தென்காசி ஆட்சியரிடம் கோரிக்கை


    ஆலங்குளத்தில் போலி பத்திரபதிவை ரத்து செய்து,வாரிசு இல்லா சொத்தினை அரசுடமையாக்க வேண்டும் தென்காசி ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆலங்குளத்தை சேர்ந்த ராஜன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஆலங்குளம் சார்பதிவாளர் எல்கைக்குட்பட்ட கருப்பசாமி கோவில் அருகில் மாசிலா மணி என்பவருக்கு சொந்தமான 38 சென்ட் காலிமனை இருந்தது. இவர் கடந்;த 30 ஆண்டுகளுக்கு முன்பு வயோதிகம் காரணமாக இறந்து விட்டார். அவருக்கு சட்டப்படியாக வாரிசுகள் யாரும் இல்லை. இதனையறிந்த ஆலங்குளம் பகுதியை சேர்ந்த சிலர் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம் தீட்டி மோசடி ஆவணங்கள் தயார் செய்து  பத்திரபதிவு செய்துள்ளனர். வாரிசு இல்லாதவர்கள் சொத்துகள் அனைத்தும் அரசுடமை ஆக்க வேண்டும் என சட்டம் உள்ளது. எனவே போலியாக பதிவு செய்த பத்திரத்தை ரத்து செய்து, அரசுடமை ஆக்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    No comments