சென்னை வடக்கு பட்டு மேடவாக்கம் தொழில்முனைவோர் குறித்து பொதுமக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது
சென்னை அடுத்த வடக்குபட்டு மேடவாக்கம் குடியிருப்போர் நல சங்கம் கூட்டமைப்பு சார்பில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பொதுமக்கள் மைதானத்தில் தொழில்முனைவராக்கும் வகையில், வீட்டில் தயாரித்த மற்றும் பொருட்களை கண்காட்சி படுத்தி விற்பனை செய்யும் மேடவாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது வீ டே யின் இரண்டாம் ஆண்டு விழா தலைவர் சுபஸ்ரீ நடராஜன், தலைமையில் செயலாளர் ஜெய் கணேஷ், பொருளாளர் ஸ்வேதா, ஆகியோர் முன்னிலையில் கண்காட்சி 100க்கும் மேற்பட்ட அரங்குகளை பொதுமக்கள் அமைத்திருந்தனர்.
இதில் பிரதனமாக உணவு பொருட்கள் கண்காட்சி அமைந்திருந்தது பொது மக்களே துணி மற்றும் உணவு பொருட்கள் பல்வேறு பொருட்களை அவர்களே நேரடியாக விற்பனை செய்தனர். அதேபோல் உணவு பொருட்கள் மட்டுமின்றி அழகுசாதன பொருட்கள், கைவினை பொருட்கள், மேக்கப் பொருட்கள், என கிராமத்து திருவிழாவை நேரில் காண்பது போல் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த கண்காட்சியில் பொதுமக்கள் குழந்தைகள் மேடவாக்கம் குடியிருப்போர் நல சங்கம் கூட்டமைப்பு என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு பொதுமக்கள் தயாரிப்புகளை வாங்கி பொதுமக்களுக்கு ஊக்கமளித்தனர்.
இந்த கண்காட்சி மூலம் கிடைக்கும் நிதியை மேடவாக்கத்தில் இருக்கும் வரப்புயர புதுப்பித்தல் பெரிய ஏரியை பராமரிப்பு தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் மேடவாக்கம் குடியிருப்போர் நல சங்கம் கூட்டமைப்பு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இறுதியில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது அனைவருக்கும் ஊக்குவிக்கும் வகையில் சுபஸ்ரீ நடராஜன் உலக சாதனை படைத்த குராசட் சால்வை அவர்களுக்கு வழங்கினார்கள்.
No comments