காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் மண்ணிவாக்கத்தில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல்கான பாக கழக உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் மண்ணிவாக்கத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம்.கஜா என்கின்ற கஜேந்திரன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் கலந்துகொண்டு பாக முகவர்களுக்கான ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஏ.பொன்னுசாமி, மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் வனஜா, மண்ணிவாக்கம் பூத் கமிட்டி பொறுப்பாளர் கனி என்கின்ற கணேசன், மண்ணிவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி புருஷோத்தமன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணைத் தலைவர் துளசிங்கம், காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய இளைஞரணி அவை தலைவர் மற்றும் 7வது வார்டு உறுப்பினர் நாகராஜ், எம்ஜிஆர் மன்ற காட்டாங்குளத்தூர் ஒன்றிய தலைவர் வீரப்பன், பொன் தர்மராஜ், 6வது வார்டு செயலாளர் கபில், உள்ளிட்ட மண்ணிவாக்கம் கிளைக் கழக நிர்வாகிகள் கிளைக் கழகச் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
No comments